சற்றுமுன்னர் வவுனியா தாண்டிக்குளத்தில் புகையிரத்துடன் முச்சக்கரவண்டி மோதி கோரவிபத்து.

0
7962

முச்சக்கரவண்டி ஓட்டுனர் ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று 14.08.2017 மாலை 04.45 மணியளவில் இவ் கோரவிபத்து நடைபெற்றுள்ளது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரத்தில் மோதி தாண்டிக்குளப் பகுதியில் இருந்து முச்சக்கரவண்டி வீதியை கடக்கும் பொழுது இவ் விபத்துக்குள்ளாகியுள்ளது. வவுனியா பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (இந்த விபத்து இடம்பெற்ற புகையிரதக் கடவையானது பாதுகாப்பற்றது என்பது குறிப்பிடத்தக்கது)

பிந்திய செய்தி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்து செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 4.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பயணித்த போது அப் பகுதியில் இருந்த பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடந்து செல்ல முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து முச்சக்கர வண்டி 500மீற்றர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. இவ்விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியான ஈச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.கிருபா (வயது 28) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இதேவேளை, குறித்த பகுதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவையை முன்னர் இருந்ததுடன்,  புகையிரத சமிக்ஞை பொருத்தப்பட்ட பின்னர் அது அகற்றப்பட்டிருந்தமையும், வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களும், அப்பகுதி மக்களும் பாதுகாப்பான புகையிரத கடவையாக அதனை மாற்றுமாறு புகையிரத திணைக்களத்திடம் கோரிக்கை விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இன்று 15.08.2017 காலை 9.00 மணிக்கு இந்த புகையிரதக்கடவைக்கு பாதகாப்பு கடவையை அமைக்குமாறு கோரிக்கையை முன்வைத்து தண்டிக்குளத்தில் பொது மக்கள் ஆர்பாட்டம் செய்யவுள்ளனார் என்பது குறிப்பிடத்தக்கது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here