சிறிதரனின் இரட்டை முகம் (2) – கருணாகரன்

0
60

சம்மந்தனையும் சுமந்திரனையும் மாவையையும் விட மனோ கணேசனும்இராதாகிருஸ்ணனும்சுவாமிநாதனும்தன்னுடையஅரசியலுக்கு உதவக் கூடியவர்கள் என்றுசிறிதரன்போட்ட கணக்கும் எடுத்தமுயற்சிகளும் இப்பொழுது நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.

மனோவுக்கும்சுமந்திரனுக்குமிடையில் (தமிழ் முற்போக்கு முன்னணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும்) ஏற்பட்டுள்ள முரண்பாடுகள்சிறிதரனின்அரசியல்தேவைகளில்நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

இருந்தாலும் “முடிந்தவரையில் செய்வோம், முடியுமானவரையில் வென்றெடுக்கலாம்” என்ற எண்ணத்தில் அவர் மலையகத் தலைமைகளோடு உறவுகளைப் பேணி வருகிறார். இதன் மூலம் பெறக்கூடியவற்றைப் பெற்றுவிட முயற்சிக்கிறார்.இதற்காக அண்மையில் தலவாக்கலையில் நடந்த போராட்டத்தில்கூடப் பங்கேற்றிருந்தார்.இதிலும்சிறிதரனதும்=தமிழரசுக் கட்சியினதும் (தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்)இரட்டைத்தன்மையைக்கவனிக்கலாம்

சுமந்திரன் அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, மனோவுடனும் தமிழ்முற்போக்குமுன்னணியோடும்மோதிக்கொண்டிருக்கும்போது சிறிதரன் இந்தத் தரப்புகளோடு இணக்கமாக இருக்கிறார்.

இந்தத் தரப்புகளை கிளிநொச்சிக்கும் அழைத்து வருகிறார். இது எப்படிச் சாத்தியம்?

அதேவேளை கிளிநொச்சியில் உள்ள மலையகத் தமிழர்களை இழிவாக விழிக்கிறார். பாரபட்சமாக நடத்துகிறார். மலையக மக்கள் வாழும் பகுதிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடக்கம் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் வரையில் மிகக் குறைவாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அல்லது ஒப்புக்கு ஏனோ தானோ என்றளவிலேயே செய்யப்படுகின்றன.

இதுகூட சிறிதரனின் மன விரினால் – பரந்து பட்ட மனப்பாங்கினால் ஏற்பட்டதல்ல. அவருடைய அரசியற் போட்டியாளரான முருகேசு சந்திரகுமாரின் அழுத்தத்தினால் – அரசியலினால் உண்டானது.

பாதிக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்படுகின்ற  மக்களை முன்னிலைப்படுத்தும் “சமூகநீதி, சமத்துவம்” என்ற எண்ணக் கருவூலத்தின் அடிப்படையிலான அரசியலைச் சந்திரகுமார் மேற்கொண்டு வருவதால் உண்டான நெருக்கடியைச் சமாளிப்பதற்காக சிறிதரனின் கவனம் இந்த மக்களின் மீதும் திரும்பியது.

ஆனாலும் அது முழுமைப்படவில்லை. அவரால் அதை முழுமைப்படுத்sritharan-10த – விசுவாசமாகச் செய்ய முடியாது.

ஏனெனில் அவருடைய வலுவான ஆதரவுத்தளம் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக்கொண்டகிளிநொச்சி வாசிகளுடையதாகும். அவர்களே சிறிதரனின் வெற்றியையும் நடவடிக்கைகளையும் தீர்மானிக்கும் சக்திகள். அவர்களே அவருடைய நெருங்கிய சகாக்கள். உள் வளையத்தினர்.

எனவே அவர்கள் எதிலும் தங்களுக்கே முன்னுரிமையைக் கோருவர். அவர்கள் தங்களுக்குள்ளேயே சிறிதரனைக் கட்டுப்படுத்துவதற்குமுயல்வர்.அவர்களைத்திருப்திப்படுத்தவில்லை என்றால் அது சிறிதரனுக்குப் பெரும் சரிவை ஏற்படுத்தும். அவர்களைத் திருப்திப்படுத்தினால் ஏனைய தரப்பு மக்களின் அதிருப்தியைச் சம்பாதிக்க வேண்டும்.

இதைச் சமனிலைப்படுத்துவதற்காகவே மலையத் தலைமைகள், இந்தியத் தூதுவர் போன்றோரைப் பயன்படுத்துகிறார் சிறிதரன். அண்மையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜா போன்றவர்களை சாந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்றமையும் இதன்பாற்பட்டதே. எதிர்காலத்தில் மேலும் சில இந்தியப் பிரபலங்களை இவ்வாறு அவர் அழைத்து மேடையேற்றக் கூடும். (2013, 2015 தேர்தல்களின்போது மனோ கணேசன் பாரதிபுரம் போன்ற பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தப்பட்டதை நினைவிற் கொள்க).

இருந்தாலும் இதெல்லாம் தொடர்ச்சியாக வெற்றியளிக்கும் என்று சொல்ல முடியாது. முன்னரை விடவும் விழிப்புணர்வும் சுய நம்பிக்கையும் இந்த மக்களிடம் ஏற்பட்டுள்ளன. அவர்கள் சுயமாகச் சிந்திக்கவும் கேள்விகளைக் கேட்கவும் எடுப்பார் கைப்பிள்ளைகளாக இல்லாமல், புதிய தெரிவுகளை நோக்கி நகரவும் தொடங்கி விட்டனர்.

இதனால் பெரு வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டிய நிலை சிறிதரனுக்குண்டு.

இதை எப்படியாவது சீர்ப்படுத்தி விட வேண்டும் என்று அவர் முயற்சிக்கிறார். இதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையிலும் புறக்கணிக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒரு தொகுதியினரைத் தன்னோடு இணைத்து வைத்திருக்க முயற்சிக்கிறார். இருந்தாலும் இது வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் செல்வாக்கை எந்த வகையிலும் தடுத்து நிறுத்துவதற்கு உதவாது. வாழை சரிந்தால் முண்டு கொடுத்து நிமிர்த்தலாம். ஆல் சரிந்தால் எதுவும் செய்ய முடியாதல்லவா!

இதற்கிடையில் கிளிநொச்சிக்கு வருகை தந்து கொண்டிருக்கும் மலையக அரசியற் தலைவர்கள் தொடர்ந்தும் சிறிதரனின் நிகழ்ச்சி நிரலில் இயங்க முடியாது என்ற குரல்களும் எழத் தொடங்கியுள்ளன. இது எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்கள் உண்டாக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. எனினும் மலையகத் தலைமைகள் எதிர் காலத்தில், சிறிதரனின் வலையில் சிக்காமல், சற்று விழிப்பாக – நிதானமாகச் செயற்படும் என்று எதிர்பார்க்கலாம்.

அப்படியென்றால் அடுத்து என்ன செய்யப்போகிறார் சிறிதரன்? என்ற கேள்வி எழும்.

நிச்சயமாகச் சிறிதரனின் அரசியல் எதிர்காலம் நெருக்கடிக்குள்ளாகியே – கேள்விக்குள்ளாகியே வருகிறது. அவருடைய அரசியல் தந்திரோபயங்கள் பகிரங்கமாகி மலினப்படுத்தப்பட்டு விட்டன. இனி யாரைக் கையாளலாம் என்ற குழப்பத்திற்குள்ளாகியுள்ளன.
chandrakumar
சிறிதரன் அரசியலில் பிரவேசித்தபோது (2010 இல்) அவரை ஆதரிப்பதற்கு கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் பெருந்தொகை ஆசிரியர்கள் முன்வந்திருந்தனர். ஏற்கனவே ஆசிரியராகவும் அதிபராகவும் அவர் இருந்தது ஒரு காரணம்.

ஆனால், அவர் கடந்த சில ஆண்டுகளாக கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வியில் – பாடசாலைகளின் நிர்வாகத்தில் தலையீடு செய்யத் தொடங்கியதன் மூலமாக ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டன. இதற்கு அவரோடு முன்னர் கல்விப் பணிப்பாளராகவும் பின்னர் மாகாணக் கல்வி அமைச்சராகவும் இருந்த தம்பிராஜா குருகுலராஜாவும் காரணமாக இருந்தார்.

இதன் விளைவாக கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் இலங்கையிலேயே கடைசி நிலைக்குத் தள்ளப்பட்டது. கூடவே வறுமை முதல் நிலையைப் பெற்றது.

இதுகல்வியாளர்கள்மட்டத்திலும்கல்வியைவிரும்புவோரிடத்திலும் ஆசிரியர்கள், அதிபர்கள் மட்டத்திலும் வெறுப்பையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது.

மட்டுமல்ல, ஒரு காலம் குறிப்பிடத்தக்க அளவில் கவனம் பெற்றிருந்த, கிளிநொச்சியின் இளைய நம்பிக்கைகளாகக் கருதப்பட்ட ஒரு தொகுதி ஆசிரியர்களையும் இளைஞர்களையும் சிறிதரன் அரசியலுக்குள் உள்வாங்கி அவர்களை இன்று சிதைத்து விட்டார். அவர்கள் இப்பொழுது தங்கள் முகவரியை இழந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சுயமாகச் சிந்திக்கும் நிலையை இழந்து சிறிதரன் எதைச் சொல்கிறாரோ அதைத் திருப்பிச்சொல்கின்றவர்களாகவும்சிறிதரனின்விருப்பத்திற்கிணங்க எதையும் செய்யக் கூடியவர்களாகவும் மாறி விட்டனர்.

சிறிதரனோ தன்னுடைய அரசியல் பிராந்தியத்துள் தான் மட்டுமே ஆட்சி செலுத்துகின்றவராக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். இதனால் அவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளையோ தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள்,பாராளுமன்றப்பிரதிநிதிகள்போன்றவர்களயோ கிளிநொச்சிக்குள் அனுமதிப்பதில்லை. ஆகவே ஏறக்குறைய ஒரு ஏகாதிபத்தியவாதியாகவே செயற்படுகிறார். இதற்காக அவர் இவர்களை (இந்த ஆசிரிய அரசியல்வாதிகளையும் ஏனைய உறுப்பினர்களையும்) பிற சக்திகளோடு தொடர்பு கொள்ளவே கூடாது என்றளவில் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார். இதை மீறுகின்றவர் சிறிதரனால் ஓரங்கட்டப்படுவார்.

இதனால்தான் சிறிதரனை “நாட்டாமை” என்று சிலர் அழைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த இறுக்கமான – சர்வாதிகாரப் போக்கினாலும் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள், பாரபட்சங்களை மேற்கொண்டதாலும் ஒரு தொகுதி ஆசிரியர்கள் பகிரங்கமாகவே சிறிதரனை எதிர்க்கத் தொடங்கி விட்டனர். ஆசிரியர்கள் மட்டுமல்ல பெருந்தொகை மாணவர்களும் அவருக்கு எதிரான திசைக்குச் சென்று விட்டனர்.

இதேவேளை சிறிதரனோடு இணங்கி, அவருடைய அரசியல் நிழலில் நிற்போர் ஒரு காலத்தில் போராட்டம், போர், இடம்பெயர்வுகள் என்பவற்றுக்கெல்லாம் தாக்குப்பிடித்து நின்றவர்கள். இன்று அடையாளமற்றுப் போகின்ற அளவுக்கும் விமர்சனத்துக்குரியவர்களாகவும் மாறியுள்ளனர். முன்பு பரந்து சிந்தித்தவர்கள், தனி ஆளுமைகளாகத் துலங்கியவர்கள் இன்று கடுமையானகுற்றச்சாட்டுகளுக்குள்ளாகியுள்ளனர்.தனிமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குழுவாதம், அணிவாதம் என்று சுருங்கிப் போயிருக்கிறார்கள்.

இந்த நிலை நீடிக்குமானால் கிளிநொச்சி மாவட்டத்தின் வளர்ச்சியும் எதிர்காலமும் பாழாகி விடும். இதையிட்ட கவலை பலரையும் ஆட்கொள்ளத் தொடங்கியுள்ளது. ஆனாலும் இதை எடுத்துச் சொல்வது யார்? இந்தத் தவறுகளை எதிர்ப்பது யார்? பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற நிலையே காணப்படுகிறது. ஆசிரியர்கள், அதிபர்கள் மட்டுமல்ல ஏனைய உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் உட்படப் பலரும் அச்ச நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிறிதரன் பேசுகின்ற, கேள்வி எழுப்புகின்ற தொனி சண்டித்தனக்காரர்களைப் போன்றது எனப் பலரும் பகிரங்கமாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இதனால் எதற்கு வீண் வம்பு என்று பலரும் அடங்கிப் போகிறார்கள். அல்லது ஏதோ நடக்கட்டும் என்ற வாளாதிருக்கிறார்கள். சிலர் மட்டும் துணிச்சலாக எதிர்க்கிறார்கள். அவர்கள் சிறிதரனாலும் அவருடைய சகாக்களினாலும் மோசமாக தனிநபர் தாக்குதலுக்குள்ளாகின்றனர்.வசைபாடப்படுகிறார்கள். இவ்வாறு ஒரு அடக்குமுறை அரசியலையே வளர்த்தெடுக்க விரும்புகிறார் அவர். அவருடைய தேர்தல் மேடைகளில் பேசப்பட்ட விடயங்களும் பேசப்பட்ட முறைகளும் வடக்குக் கிழக்கில் வேறு எந்தப் பிரதேசங்களிலும் எந்த மேடையிலும் கூட்டமைப்பின் எந்தப் பிரதிநிதிகளும் பேசாதவை.

அவ்வளவுக்கு அவதூறுகள் வாரியிறைக்கப்பட்டன. கௌரவ உறுப்பினர்களாக இருப்பவர்களும் கௌரவ உறுப்பினர்களாக (மக்கள் பிரதிநிதிகளாக) வரவுள்ளவர்களும் சமூகத்துக்கு முன்மாதிரியாக – மதிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். ஆனால், தேர்தல் மேடைகளில் இவர்கள் மிகத் தரக்குறைவான வார்த்தைகளால் எதிரணிகளை அவதூறு செய்தனர். தேர்தல் மேடைகளில் எதிர்த்தரப்பைத் தாக்கி, விமர்சித்துப் பேசுவது வழமை. ஆனால், தனிப்பட்ட தாக்குதலை, இழிவு படுத்தலை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் பழிகளையும் சுமத்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆனால், இதையே  சிறிதரன் தலைமையேற்றுச் செய்தார்.

இதன் வழி வந்த இளைய தலைமுறையினரில் ஒரு தொகுதியினர்  இப்பொழுது சிறிதரனுக்குச் சார்பாக நின்று முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களிலும் எதிராளிகளின் மீதும் அரசியல் விமர்சனங்களைச் செய்வோர் மீதும் வசைகளைப் பொழிகின்றனர். அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.

(தொடரும்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here