யாழ் மையவாத சிந்தனையே “சொர்க்கத்தில் பிசா”சைக் காட்சிப்படுத்த அனுமதிக்கவில்லை என்று,ஒடுக்கப்பட்டமக்களைச்சாராதஜனநாயகவாதிகளின் பொதுக் கருத்தாக இருக்கின்றது. இது மேலெழுந்தவாரியான பொதுப் பொய்கள் மேல் கட்டப்படுகின்ற, அரசுக்கு சார்பான கருத்தியல் போக்கும் – திரிபுமாகும்.

புலிப்பாசிசம் போல் யாழ் மையவாதமும் வானத்தில் இருந்து தோன்றவில்லை. மாறாக இலங்கை சமூக அமைப்பில் இருந்து தான் யாழ் மையவாதமும் தோன்றியது. இதற்கு மாறாக யாழ் மையவாதச் சிந்தனையானது – இலங்கை சமூக அமைப்புக்கு அப்பாற்பட்டதாக காட்டுகின்றவர்கள், தங்கள் அரசியலுக்கு ஏற்ப பொது உண்மையை மூடிமறைத்து விடுகின்றனர்.

யாழ் மையவாதச் சிந்தனை வானத்தில இருந்து தோன்றவில்லை, மாறாக அது இலங்கை அரசின் ஆட்சியமைப்பு முறையில் இருந்து தான் தோன்;றுகின்றது. இதன் பொருள் ஓட்டுமொத்த மக்களை அடக்கியாளும் அரசியல் அமைப்பு சட்டமுறைமையே, யாழ் மையவாத அமைப்பு முறையைப் பாதுகாக்கின்றது. யாழ் மையவாத ஒடுக்குமுறைகளை அரசு ஓழிக்க விரும்பினால் – அதை ஓழித்துவிட முடியும்.

இலங்கையில் எந்த வகையான சிந்தனை முறைமையையும் – அரசு ஆதரவின்றி உயிர் வாழ முடியாது. இலங்கை அரசு தான் யாழ் மையவாதச் சிந்தனை முறையின் பாதுகாவலனாக இருக்கின்றது. யாழ் மையவாதச் சிந்தனையிலான ஒடுக்குமுறையை அங்கீகரிக்கின்றது. அது தன்னை மீறிப் போகாத எல்லை வரை, அதற்கு சட்டரீதியாக பாதுகாப்பு கொடுக்கின்றது. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கியாள, யாழ் மையவாத சிந்தனை முறைமை என்பது,  இலங்கை அரசியல் அமைப்புச் சட்டமாக இருக்கின்றது. இந்த யாழ் மையவாதத்தை கேள்விகளின்றி நிலைநிறுத்த, இனவாத – மதவாத ஒடுக்குமுறையை அரசு முள்தள்ளுகின்றது. அரசு தான் யாழ் மையவாத சிந்தனை முறையின் தூணாக இருக்கின்றது.

இப்படி அரசு யாழ் மையவாதச் சிந்தனையை பாதுகாக்கும் அதே நேரம் இன்றைய ஜனநாயகவாதிகள் யாழ் மையவாத சிந்தனையை பாதுகாப்பவராகஇருக்கின்றனர்.யாழ்மையவாதத்தாலும், இலங்கைஅரசாலும்ஒடுக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களைச்சார்ந்து,யாழ்மையவாதத்தைகேள்விக்குள்ளாக்கி – ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி போராடாத ஜனநாயகவாதிகளும் – அரசு சார்ந்து ஜனநாயகம் பேசுகின்ற ஜென்மங்களும், யாழ் மையவாத சிந்தனையை பாதுகாக்கின்றவராக – இன்றைய எதார்த்தத்தில் இருக்கின்றனர்.

இனம், மதம், சாதி, பால், பிரதேசம், வர்க்கம் .. என்று, ஓன்றிணைந்த ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்டஇந்தயாழ்மையவாதசிந்தனைமுறையானது அரசின்ஓட்டுமொத்தஒடுக்கும்சிந்தனைமுறைமைக்கு முரணானதல்ல.

மக்களை ஒடுக்குகின்ற பல ஒடுக்குமுறைகளில் ஏதாவது ஒன்றை விட்டுவிட்டு யாழ் மையவாதம் பற்றி யார் பேசுகின்றனரோ, அவர் யாழ் மையவாதச் சிந்தனையை பாதுகாப்பவராக இருக்கின்றார்.  ஒடுக்குமுறைகள் பற்றிக் கவலை இன்றி, ஜனநாயகம் பேசும் எவரும், யாழ் மையவாதத்தை பாதுகாத்துக் கொண்டு, யாழ் மையவாதத்தை தங்கள் (அரசியல்) இருப்புக்கு ஏற்ப போலியாக எதிர்ப்பதன் மூலம் – அவர்கள் யாழ் மையவாதத்தை பாதுகாப்பவராக இருக்கின்றனர்.

இங்கு யாழ் மையவாதச் சிந்தனை என்பது கூட குழப்பம் தான். உண்மையில் யாழ் மையவாதம் என்பது – வெள்ளாளியச் சிந்தனை முறைமையே. அதாவது இந்த சிந்தனை முறையானது சாதிய சமூக அமைப்பின் படிமுறைகளையும் – அதன் சடங்குகள் சம்பிரதாயங்களையும் ஏற்றுக் கொண்டு செயற்படும், அனைத்து சாதிகளினதும் ஒருங்கிணைந்த சிந்தனை முறையாகும். வெள்ளாளியச் சிந்தனை முறை என்பது. வெள்ளாளச் சாதியின் தனித்த சிந்தனை முறையல்ல. சாதிக் கட்டமைப்பின் பொதுச் சிந்தனை முறையாகும்.

வெள்ளாளியச் சிந்தனையிலான யாழ் மையவாதமான  இனம், மதம், சாதி, பால், பிரதேசம், வர்க்க .. ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராத ஜனநாயகமானது,  ஓடுக்கும் மற்றொரு தரப்பின் ஜனநாயகம் தான். இந்த ஜனநாயகம் தான், ஜனநாயகத்தின் பெயரில் “சொர்க்கத்தில் பிசா”சைக் கொண்டாடுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here