பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், இப்போது ஏன்? தீய சக்திகள் இங்கு வருகின்றனவா?  –   லத்தீஃப் பாரூக்

0
94

11 செப்ரம்பர் 2018 செவ்வாய்க்கிழமை, அமைச்சரவை முன்னர் யுத்த காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ யினரைக் கையாள்வதற்காக பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு (பLatheef-Farookி.ரி.ஏ) மாற்றீடாக “பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட மசோதா”(சி.ரி.எல்) ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த வரைவு மசோதா வெளிநாட்டு அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினால் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ மற்றும் அமைச்சர் சம்பிக ரணவக்க ஆகியோரின் துணையுடன் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது, பின்னைய இரு அமைச்சர்களினதும் முஸ்லிம்களுக்கு எதிரான விரோத மனப்பான்மை நன்கு அறிந்ததே, சட்டம் போதுமானளவு கடுமையாக இல்லை என்று இவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் முணுமுணுப்பதாகக் கூறப்படுகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான அலட்சிய மனோபாவம் கொண்டவர் என அறியப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் திரு. ராஜபக்ஸ பிரேரித்த திருத்தத்தை ஏற்றுக்;கொண்டார்.

வரைவு மசோதாவில் உள்ளவற்றைப் பற்றி விபரமாகச் சொல்வதற்கு நான் விரும்பவில்லை. எனினும் அமைச்சாகளான சம்பிக ரணவக்க மற்றும் விஜேதாஸ ராஜபக்ஸ ஆகியோர் இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் அதை சிறுபான்மையினருக்கு எதிராகப் பயன்படுத்தி சமூகங்களைப் பிரித்துவைத்து தங்கள் அரசியல் இலக்கை அடைவது சாத்தியமாக இருக்கும் என நம்புவதால் இப்போது இந்தச் சட்டத்திற்கு என்ன அவசியம் என்று கேட்பது முறையானது, ஆயினும் எற்கனவே ஸ்ரீலங்காவில் இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை சிங்கள பௌத்த தீவிரவாதிகளுக்கு எதிராக கட்டாயம் அமல்படுத்த வேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முந்தைய மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் இரண்டின் கீழும் முஸ்லிம்கள் அடிக்கடி தாக்குதலுக்கு இலக்காகி வந்துள்ளார்கள் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்று.

2009 மே மாதம் எல்.ரீ.ரீ.ஈ இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதிலிருந்தே பயங்கரவாதம் நசுக்கப்பட்டு விட்டது. இப்போது நாட்டில் பயங்கரவாதத்துக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை மற்றும் எல்.ரீ.ரீ.ஈ அதன் தலையை உயர்த்துவதற்கான அடையாளங்களும் இல்லை. இப்போதுள்ள ஒரேயொரு பயங்கரவாதம் ஒழுங்கமைக்கப்பட்ட சிங்கள இனவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதுதான் இதில் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த சில கூறுகள் தொடர்பு பட்டுள்ள அதேவேளை அரசாங்கம் அதையிட்டு பாராமுகமாக உள்ளது.

கேள்வி என்னவென்றால் இத்தகைய ஒரு சூழ்நிலையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான அவசியம் ஏன் என்பதுதான்? இது ஏனென்றால் நாடு இப்போது மோசமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை கடந்து செல்லவேண்டியுள்ளது, அதேவேளை ஏராளமான எரியும் பிரச்சினைகளும் தலைதூக்கியுள்ளன, இவற்றுக்கான அவசரக் கவனம் மற்றும் தீர்வு தேவையாக உள்ளபோதிலும் அவை புறக்கணிக்கப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் கீழ் முஸ்லிம்கள் வன்முறை எழுச்சிகளுக்கு இலக்காகினார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அனைவருக்கும், சட்டம் ஒழுங்கு, நீதி, பாதுகாப்பு, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை மீள நிலைநாட்டுவதாக உறுதிப்படுத்திய பின்னர், நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள் அவர்மீது நம்பிக்கை வைத்து அவருக்கு வாக்களித்தார்கள். எனினும் சில மாதங்களுக்குள்ளேயே, அதிர்ச்சியளிக்கும் வகையில் முஸ்லிம்கள் உணரநேர்ந்தது இரண்டு அரசாங்கங்களும் ஒரே மாதிரியானவை என்பதையே.

உதாரணத்துக்கு, இங்குள்ள மற்றும் வெளிநாட்டிலுள்ள முஸ்லிம்கள் மற்றும் உலகெங்கிலுமுள்ள சமாதானத்தை நேசிப்பவர்களின் உணர்வுகளைப் புறக்கணித்து ஜனாதிபதி சிறிசேன ஜேர்மனிக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது தீயில் எரிந்து நாசமான யூதர்கள் பலி செலுத்தும் வணக்கத்தலமுள்ள அருங்காட்சியகத்துக்கு விஜயம் செய்தார், அந்த நேரத்தில் உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக இனஅழிப்பு கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. இந்த விஜயத்தின் அர்த்தம்  உலகெங்கிலும் உள்ள சமாதானத்தை நேசிப்பவர்களின் ஆதரவைப் பெற்றிருந்த பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் காட்டமிராண்டித்தனத்துக்கு பரிசு வழங்குவதா.

ஸ்ரீலங்காவாழ் முஸ்லிம்கள் இதையிட்டு அதிர்ச்சியும் மற்றும் ஆழமான ஏமாற்றமும் அடைந்தார்கள். ஏற்பட்ட காயத்துக்கு மேலும் எரிச்சல் ஊட்டும்வண்ணம், அரசாங்கம் யுத்தக் குற்றவாளியான முன்னாள் பிரதமர் டொனி பிளேயரை கௌரவ விருந்தினராக ஸ்ரீலங்காவுக்கு அழைத்திருந்தது, டொனி பிளேயர், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் உடன் சேர்ந்து  பொய்யான போலிக் காரணங்களைச் சொல்லி பழம்பெரு நாடான ஈராக் மீது படையெடுத்து அதனைச் சீரழித்து, லட்சோபலட்சம் அப்பாவி ஈராக்கியர்களைக் கொன்றுகுவித்து, அந்நாட்டின் முழு உட்கட்டமைப்பையும் நாசம் செய்ததுடன் அந்த நாட்டின் எண்ணெய் வளங்கள் முதல் அருங்காட்சியகம் வரை கொள்ளையடித்தார்கள்.

ஈராக் மீது அமெரிக்கா – ஐக்கியராச்சியம் என்பன நடத்திய படையெடுப்பை கண்டிக்க மறுத்த ஒரேயொரு மூன்றாம் உலக பிரதம மந்திரியான மேற்கு சார்பான பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்காவையும் நிச்சயமாக முஸ்லிம்கள் மறந்துவிடவில்லை. அந்த ஆக்கிரமிப்பை கண்டிக்க விரும்பிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அப்படிச் செய்வதானால் அரசாங்கத்தைவிட்டு வெளியேறியபின் செய்யவும் என்று அவர் சொன்னதாகக் கூறப்படுகிறது. தனது விஜயத்தின்போது பிளேயர், அமெரிக்கா தலைமையிலான ஐக்கிய இராச்சிய, ஐரோப்பிய மற்றும் இஸ்ரேல் போர்வெறியர்களின் பிரியத்துக்குரியவர்களான ஜனாதிபதி சிறிசேனவையும் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவையும் சந்தித்தார். லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச நிலையத்தில் பிளேயருக்கு உரையாற்றுவதற்கான கௌரவம் வழங்கப்பட்டது கூட ஒரு வெட்கம் கெட்ட செய்கை, என்பதுடன் எங்கள் நாடு மனித மதிப்புகளில் கவனம் செலுத்துவதில்லை என்பதும் இதன்மூலம் வெளிப்படுகிறது. 1960 மற்றும் 1970களின் ஆரம்பங்களில் அச்சமற்ற சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்ட நாடாக மதிக்கப்பட்ட அந்த அச்சமற்ற நிலை இப்போது இல்லை.

இதன் மத்தியில் இங்கும் அங்குமாக முஸ்லிம்கள்மீது வன்முறைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப் பட்டன. இந்த தாக்குதல்கள் தீவிரமடைந்த போது, 2017 ஜூன் மாதம் ரமதான் பிற்பகுதியில் சிங்கள மற்றும் முஸ்லிம் சிவில் சமூகங்களைச் சேர்ந்த ஒரு கூட்டுத் தூதுக்குழு ஒன்று பேராசிரியர் சரத் விஜேசூரியா தலைமையில் ஜனாதிபதி சிறிசேனவைச் சந்தித்து இந்தத் தாக்குதல்களை நிறுத்துமாறு முறையிட்டது. இந்த தாக்குதல்கள் யாவும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக மகிந்த ராஜபக்ஸ செய்யும் வேலை எனக்கூறி அவர்களின் வேண்டுகோளை அவர் தள்ளுபடி செய்தார். எனினும் சில மாதங்கள் கழித்து மார்ச் 2018ல்  நூற்றுக்கணக்கானவர்களைக் கொண்ட சிங்கள பௌத்த கும்பல்கள் உரத்த குரலில் கூச்சலிட்டவாறு, பொல்லுகள், கற்கள் மற்றும் பெற்றோல் குண்டுகளை ஏந்தியவாறு மத்திய மலைநாட்டில் உள்ள அம்பத்னை நகருக்குள் இறங்கியது, பின்னர் இந்த முஸ்லிம் விரோத கலவரம் அம்பாறை, தெல்தெனிய, திகன மற்றும் அக்குறணை போன்ற பிரதேசங்களுக்கும் பரவியது.

அநேகமான பத்தி எழுத்தாளர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறும் ஒரு வெற்றிடத்தில் இருந்து எழவில்லை ஆனால் ஒரு சித்தாந்தம் மற்றும் ஒரு அரசியல் திட்டத்தின் ஆதரவுடனேயே ஏற்பட்டுள்ளது என்று சொன்னார்கள். இன்னும் சிலர் மிகைப்படுத்தலின் எல்லைக்கே சென்று, தற்பொழுது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நிலையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக கொந்தளிப்பை ஏற்படுத்துவதற்காக இது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமிட்ட செயல் என்று கூறினார்கள்.

ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், கலாநிதி. தீபிகா உடகம, “இடைக்கிடை நடைபெறும் இந்த வன்முறை நிகழ்வுகள், சமூக ஊடகங்களில் சில மதக்குழுக்களுக்கு எதிராக வெளியிடப்படும் தொடர்ச்சியான வெறுப்பு பிரச்சாரங்களின் விளைவாகவே ஏற்படுகிறது என்றும் ஆகையால், சட்டத்தின் கீழ் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்டி மாவட்டத்திலும் மற்றும் ஏனைய பகுதிகளிலும் மத வெறுப்பு மற்றும் வன்முறைகளைத் தூண்டும் கூறுகளை தண்டிக்க வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இத்தகைய வன்முறைகளில் நேரடியாகப் பங்குபற்றிவர்கள் மீதுமட்டும் நடவடிக்கை எடுப்பதுடன் நின்றுவிடாமல் குறிப்பாக இத்தகைய வன்முறைகளைத் தூண்டிவிட்டு அதற்கு அமைப்பு ரீதியான பலத்தை வழங்கியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாத வன்முறையாளர்களுக்கு எதிராக விரைவானதும் மற்றும் உறுதியானதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், இத்தகைய சம்பவங்கள் மேலும் தொடர்வதுடன் அது அதிகரிக்கவும் செய்யும். அரசாங்கம் நல்லாட்சிக்கான நம்பிக்கை மற்றும் அமைதியான எதிர்காலம் என்பனவற்றுக்கான வாக்குறுதிகளை வழங்கியதற்கு மாறாக இனவாதக் குழக்கள் தங்களைத் தாக்குவதற்கு அனுமதித்துள்ளது என்கிற உணர்வு முஸ்லிம் சமூகத்திடையே வளர்ந்து வருகிறது, என்ற கருத்தில் ஆணையகம் உறுதியாக உள்ளது.

சில எண்ணிக்கையிலானவர்கள்  கைது செய்யப்பட்டார்கள், எனினும் எவர்மீதும் வழக்குத் தொடரப்படவில்லை, யாரும் குற்றம்சாட்டப்படவோ அல்லது தண்டிக்கப்படவோ இல்லை. இது அரச விவகாரங்களின் அருவருப்பான நிலை. பாதிக்கப்பட்டவர்களை சென்று சந்திப்பது தகுந்த செயல் என ஜனாதிபதி சிறிசேன கருதவில்லை, ஆனால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக புதுதில்லி விரைந்தார். இந்தப் பகைமை உணர்வு இன்றுவரை தொடர்கிறது, அதேவேளை  இறக்ககாமம் மாயக்கால் பகுதியில் அரசாங்கம் ஒரு பௌத்த கோவில் கட்டுவதற்கு முடிவு செய்திருப்பதால் அம்பாறையில் இனவாத சக்திகள் பதற்ற நிலையை தோற்றுவித்துள்ளன.

இன்று,கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் கடந்தபின்பும் அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை மோசமாக நிராகரித்துவிட்டதுடன் அனைத்து துறைகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. முஸ்லிம்கள்மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெறுவது, மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்துக்கும் மற்றும் மைத்திரி – ரணில் அரசாங்கத்துக்கும் இனவெறித் தாக்குதல்களைத் தொடர்வதில் எந்த வித்தியாசமும் இல்லை என முஸ்லிம்களை உணர வைத்துள்ளது. மறுபுறத்தில் ரோகிங்கயா முஸ்லிம்கள் மீது அங்கு அதிகாரத்தில் உள்ள மியன்மார் இராணுவம் நடத்திய இனப்படுகொலையை கண்டிக்கத் தவறியது அரசாங்கத்தின் மிக மோசமான வெளிநாட்டு கொள்கை முடிவுகளில் ஒன்றாகும்.

உலகளாவிய ரீதியில் அனைத்து முஸ்லிம் தொடர்பான பிரச்சினைகளிலும் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு விரோதமாகவே இருந்துள்ளது. உதாரணத்துக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் உள்ள அனைத்து சர்வதேச முஸ்லிம் சக்திகளும் இவர்களுடன் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா என்பனவும் ஒன்றுசேர்ந்து ஒன்பது முஸ்லிம் நாடுகளை குண்டு வீசி அழித்துள்ளன. பதினொரு மில்லியனுக்கும் அதிகமாக முஸ்லிம்களை கொன்றதுடன் 50 மில்லியன் முஸ்லிம்களை அகதிகளாக்கியுள்ளன, இங்கு இந்தத் தீவில் அவர்களின் சொந்த முஸ்லிம் விரோத நிகழ்ச்சித்திட்டமானது அவர்களின் உலகளாவிய முஸ்லிம் விரோதச் சதியின் ஒரு பாகமாகும். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் அரசாங்கம் இந்தச் சக்திகளுக்கு ஆயுதம் வழங்கி ஊக்கம் தர முயற்சிக்கிறது. அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவை அனுபவிக்கிறார்கள். அவர்கள் பிரதான நீரோட்டத்தில் உள்ள ஊடகங்களுக்குள் ஊடுருவி இருப்பதாகப் பலரும் சந்தேகிக்கிறார்கள் மற்றும் அறிவுள்ள முஸ்லிம்கள் இந்த வெளிநாட்டுத் தீய சக்திகள் குறிப்பாகத் தீவிலுள்ள முஸ்லிம்களுக்கு எதிராகச் சதி செய்வார்கள் என அஞ்சுகிறார்கள்.

முஸ்லிம்கள்மீது தீவிரமான வெறுப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை போன்ற நிகழ்ச்சித் திட்டத்தை தன்னகத்தே கொண்டுள்ள வாஷிங்டன் – டெல் அவிவ் – நியு தில்லி முஸ்லிம் விரோத  அச்சுக்குள் இந்த அரசாங்கமும் உறிஞ்சப்பட்டுக்கொண்டு வருவதினால் இந்த அச்சம்  மேலும் வளர்கிறது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்த தீய எழுச்சிமிக்க அச்சு, ஒன்றுக்கொன்று நெருக்கமான மூன்று அந்நிய சக்திகளை ஒன்றிணைத்துள்ளதின் மூலம்  “ சர்வதேச உறவுகளில் நிரந்தர நண்பன் என்ற ஒன்றில்லை ஆனால் நிரந்தர நலன் மட்டுமே உள்ளது” என்கிற ஒரு பழைய பழமொழியை நினைவுபடுத்துகிறது.

ஒரு கடுமையான இவாஞ்சலிகன் கிறீஸ்தவரும் மற்றும்  வெகு தீவிரமான முஸ்லிம் விரோத போர் வெறியருமானஅமெரிக்க ராஜாங்க செயலர் மைக் பொம்பே, பாதுகாப்புச் செயலர்  ஜேம்ஸ் மற்றிஸ் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் மற்றும் சியோனிச சார்புடையவருமான ஜோண் போல்ட்டன் ஆகியோரின்; சமீபத்தைய இந்திய விஜயத்தின்போது வளரும் இந்தக் கூட்டணி உறுதியானது. அது இவாஞ்சலிக்கன் கிறீஸ்தவர்கள், சியோனிச யூதர்கள் மற்றும் இந்து பயங்கரவாதிகளான ராஷ்ரிய சுயம்சேவக சங் எனப்படும் ஆர்.எஸ்.எஸ் ஆகியோரின் பொதுவான ஒரு முஸ்லிம் விரோத நிகழ்ச்சி நிரல். இந்த மூவருக்கும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு பொதுவான நிகழ்ச்சித்திட்டமே உள்ளது. இந்த தீவின் அரசாங்கமும் இந்த சக்திகள் அனைத்துக்கும் மற்றும் தீவிலுள்ள அவர்களது கூலிப்படையினருக்கும் உள்நுழைவதற்கான கதவுகளை விரியத் திறந்துவிட்டுள்ளது.
சிங்கள சமூகத்தின் மத்தியில்; இருந்து பொறுப்பான சக்திகள் எழுந்து இந்த உலகளாவிய அழிவுச் சக்திகளைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் இந்த நாடு திரும்புவும் ஒரு கொலைக்களமாக மாறி அனைவருக்கும் தீங்கு விளைவிப்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிடும்.

எனினும் ஜனாதிபதி சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் மூலம் நம்பிக்கைக்கான சில சாதகமான அம்சங்கள் உருவாகியுள்ளதாகத் தோன்றுகிறது, தீவில் வெளிநாடுகளின் தலையீடு தேவையில்லை என்றும் மற்றும் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனம் காரணமாக துன்பப்படும் பலஸ்தீனியர்களின் போராட்டத்துக்குத் தனது ஆதரவையும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here