புலமைப்பரீட்சை மாணவர்களுக்கு இலவச வழிகாட்டல் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

0
349

2018ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் வழிகாட்டல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் வவுனியா இறம்பைக்குளம் ஈஷி பூரண சுவிஷேச சபையின் பிஷப் இராஜசிங்கம் தலைமையில் மாலை 3மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தரம் ஜந்து 2018ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில் தோற்றவுள்ள 302மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு புலமைப்பரிசில் கற்றல் வழிகாட்டல் உபகரணங்கள் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிளி. முல்லைத்தீவு பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெலிகன்ன, அகபே (ஈ.பி.எம்) திருச்சபையின் ஆயர் அலன்நீல் மற்றும் அவருடன் வருகைதந்த சிரேஷ்ட போதகர்களும் அமெரிக்கா ஊழியர்கள் குழுவினர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், போதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here