வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றில் இவ்வருடம் பாடசாலை ஆரம்பமானதிலிருந்து ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு பாடசாலைகளில் வழங்கப்படும்  சத்துணவுத்  திட்டத்தினூடான  பகல்  உணவு   வழங்கப்பட
வில்லை என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் 192 மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர் இதில் 90 பெண் மாணவர்களும் 102 ஆண் மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வரும் பாடசாலை ஆரம்பமான திகதியிலிருந்து பகல் உணவு வழங்கப்படவில்லை. பாடசாலையில் ஆரம்பப்பிரிவில் 82 மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கான பாடசாலைகளில் வழங்கப்படும் இலவச சத்துணவு இன்று வரையில் வழங்கப்படவில்லை குறித்த பாடசாலையிலிருந்து அதிபர் விலகியுள்ளதுடன் தற்போது பதில் அதிபர் கடமையாற்றிவருகின்றார். இன்று பதில் அதிபரிடம் இவ்விடயம் குறித்து கேட்டபோது, பதில் அதிபராக கடமையாற்றிய போதும் பொறுப்புகள் தன்னிடம் முன்னைய அதிபரால் ஒப்படைக்கப்படவில்லை என்பதினாலும், மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கு வவுனியா தெற்கு கல்வி வலயத்திலிருந்து அனுமதி கிடைக்காமையும் இத்தாமதத்திற்கு காரணம். இது குறித்து  கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.   எமக்கு அனுமதி வழங்கினாலே நாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று பதில் அதிபர் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரிலிருந்து பின்தள்ளிய கிராமமான அண்ணாநகரிலுள்ள பாடசாலையில் வசதியற்ற மாணவர்களே கற்றல் செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கான சத்துணவு வழங்கும் திட்டம் இவ்வருடம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் சென்ற நிலையிலும் இன்று வரையில் வழங்கப்படவில்லை. நகரிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவுகள் வழங்கப்படு வருகின்ற நிலையிலும் கிராமத்திலுள்ள வசதியற்ற மாணவர்கள் கல்வி கற்றுவரும் அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்திற்கு சத்துணவு வழங்க கல்வி அதிகாரிகளால் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் இன்று வரையில் மேற்கொள்ளப்படவில்லை. என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வியடம் குறித்து வவுனியா தெற்கு கல்வி வயலப்பணிப்பாளர் முத்து இராதாகிருஷ;ணனிடம் தொடர்புகொண்டபோது,
அப்பாடசாலையின் அதிபர் அங்கிருந்து விலகியதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியே இதற்குக்காரணம். பாடசாலைகளின் முதலீடுகளிலிருந்தே பகல் உணவு வழங்கும் திட்டத்தை கையாண்டு வருகின்றோம் எனவே குறித்த பாடசாலையில் முதலீடுகளிலும் பற்றாக்குறை நிலவுகின்றது. தற்போது அதை சீர் செய்வதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. இன்னும் சில தினங்களில் உணவு வழங்கும் நடவடிக்கை சீர் செய்யப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here