வவுனியாவில் நொச்சிமோட்டை கிராமத்துக்கும் சின்னக்குளம் கிராமத்திற்கு இடையில் சமூக மோதல் பொலீசரின் அசன்டையினமே இம் மோதல்களுக்கு காரணம் இரு கிராமத்தவரும் குற்றச்சாட்டு.

0
3915


வவுனியா ஏ9 வீதியில் உள்ள நொச்சிமோட்டை கிராமத்தில் 13.10.2017 அன்று நண்பகல் அளவில்   இரு சமூகத்திற்கு இடையிலான மோதலில் மூவர் காயமடைந்ததுடன் இரு வீடுகள் சேதமடைந்துள்ளது. பொலீசாரின் தலையீடு காரணமாக சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்டு பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்கள்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் நடந்த  சிறு வன்முறையில் இருந்து தொடர்ச்சியாக அங்கொன்று இங்கொன்றுமாக நடந்த சிறு சண்டைகள் தற்போது இரு சமூகத்திற்கு இடையிலான பாரிய மோதலாக வெடித்திருக்கிறது.

இம் மோதலை பொலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே இப் பிரச்சினை பாரிய அளவில் சமூக வன்முறையாக மாறியது என்று இரு சமூகத்தினரும் குற்றசாட்டை முன்வைக்கின்றார்கள்.

மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பாக எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here