வவுனியாவில் பிரம்ம குமாரிகள் இராஜயோக தியான மண்டப நிலையம் திறப்பு

0
379

வவுனியா கற்குழியில் இன்று 20 காலை 9.30மணியளவில் பிரம்ம குமாரிகள் இராஜயோக தியான மண்டபம் திறப்பு விழா இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வரவேற்பு நடனத்தினையடுத்து ஆரம்பமான நிகழ்வுகளில் வவுனியா மாவட்ட விவசாயப்பணிப்பாளர்இ மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர், இலங்கைக்கான பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் பொறுப்பாளர் திரு. கணேஷ், யாழ்ப்பாண நிலையத்தின் சகோதரி றஞ்சி, வவுனியாவிற்கான நிலையத்தின் சகோதரி திருமணி மற்றும் வவுனியா நிலைய சகோதரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் ஆசியாவிற்கான பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் பிரதம இயக்குனர் வைத்திய கலாநிதி நிர்மலா கஜாரியா கலந்துகொண்டு தியான மண்டபத்தினை உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்ததுடன் நினைவுப் பெயர்ப்பலகையினையும் திரைநீக்கம் செய்து வைத்து, இன்றைய தியான நிகழ்வுகளையும் ஆரம்பித்துவைத்தார்.

மன ஆற்றுப்படுத்தும் தியானங்கள் இந்த மண்டபத்தில் தினமும் காலை மாலை என இலவசமாக இடம்பெறுவதுடன் இன மத சமய கலாச்சார வேறுபாடின்றி தியான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று நிலையத்தின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here