வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று முற்பகல் 10.30மணியளவில் வடகிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலிருந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஒன்றிணைந்து சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டம் ஒன்றிணை மேற்கொண்டுள்ளனர்.
வடகிழக்கு 8 மாவட்டங்களிலிருந்தும் (மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்Pவு, யாழப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியர், திருகோணமலை) பழைய பேருந்து நிலையப்பகுதியில் காலை 9மணியளவில் ஒன்றிணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சர்வதேசத்தின் தலையீட்டினைக்கோரி கதறி அழுது இன்றைய போராட்டத்தினை மேற்கொண்டனர்.
எங்கே எங்கே உறவுகள் எங்கே? சர்வதேசமே உறவுகளை மீட்டுத்தா, பதில் சொல் பதில் சொல்ல அரசே பதில் சொல், எமது உறவுகள் எங்கே? வேண்டும் வேண்டும் உறவுகள் வேண்டும், சர்வதேசமே பதில் சொல், கையில் ஒப்படைத்த உறவுகள் எங்கே? எமது உறவுகள் எமக்கு வேண்டும், சர்வதேச விசாரணை வேண்டும், மன்னார் புதைத்தது யார்? வேண்டாம் வேண்டாம் ஓ. எம். பி வேண்டாம், வேண்டும் வேண்டும் உறவுகள் வேண்டும், ஜ.நாவே இலங்’கைக்கு இனியும் காலக்கெடு வழங்காதே எம்மை படுகுழியில் தள்ளாதே, ஜ.நாவே கூட்டுப் புதைகுழி ஆதாரங்களை அழிக்கவிடாமல் காப்பாற்று, போன்ற கோசங்களை எழுப்பியவாறும் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களைத்தாங்கியவாறும் 500ற்கும் மேற்பட்ட தாய்மார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கூட்டுக்கோபுரம் வரை சுமார் 100மீற்றர் தூரத்திற்கு நின்றிருந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக பசார் வீதி வழியாக ஹொறவப்பொத்தான வீதியூடதக வைத்தியசாலை சுற்றுவட்டத்தினைவந்தடைந்து நீதிமன்ற வழியாக மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு வந்து பழைய பேருந்து நிலையத்தினை திரும்பவும் வந்தடைந்தது போராட்டத்தினை மேற்கொண்டனர்.
இந்து, பௌத்த, கிறிஸ்தவ ஆகிய மும்மத சமயத்தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தான், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களாக ப. சத்தியலிங்கம், ம. தியாகராசா, எம். கே. சிவாஜிலிங்கம், பொது அமைப்பினர், வர்த்தகர் சங்கத்தலைவர், உறுப்பினர்கள், தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர், உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் சார்ந்த உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here