வவுனியா ஐநாசபையின் பூலோக கால மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்.

0
527


இன்று காலை 10 மணியளவில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம, காணி மற்றும் விவசாய மறுசீர் அமைப்பு மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து வருகின்ற ஒக்டோபர் மாதம் ஐநா சபையில் நடக்க இருக்கும் பூலோக கால மீளாய்வு தொடர்பாக இலங்கை சிவில் அமைப்புக்கள் முன்வைத்த அறிக்கை தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் வவுனியா அருந்ததி ஹேட்டலில் ஆரம்பமானது.

இந் நிகழ்வு ஏற்கனவே ஐநா சபைக்கு சிவில் அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட அறிக்கை, CESCR அறிக்கையின் சிபாரிசுகள் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்னென்ன சிபாரிகள் நடைமுறைப்படுத்த போகின்றோம் என்பதை வலய ரீதியாக கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இக் கலந்துரையாடலுக்கு வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டகளப்பு, திருகோணமலை, கொழும்பு ஆகிய 09 மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.

ஐநாசபையில் வருகின்ற ஒக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் பூலோக கால மீளாய்வு தொடர்பான கூட்டத்தொருக்கு எமது நாட்டில் இருந்து சிவில் அமைப்புக்கள் பரிந்துரை தொடர்பாக இக் கலந்துரையாடலில் ஆராயப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடல் இலங்கையை 04 வலயங்களாகப் பிரித்து முதலாவது வலயக் கலந்துரையாடல் 29ம் திகதி நேற்று ஹட்னிலும், 30ம் திகதி இன்று வவுனியாவிலும், 08ம் திகதி காலியிலும், 11ம் திகதி கொழும்பிலும் நடைபெறும் என்று இந் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஜெசுதாசன் தெரிவித்தார்.

இந் நிகழ்ச்சிக்கு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயத்தின் ஹேமகுமார, காணி மற்றும் மறுசீர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் சிந்தக்கராஜபக்ச, சட்டத்தரணி சம்பத், பிரான்சிஸ் ராஜா இணைப்பாளர், ஜெசுதாசன் இணைப்பாளர் ஆகியோர் கலந்துக் கொண்டு உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here