வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 20வது ஆண்டு நிறைவு விழா

0
376


வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 20வது ஆண்டு நிறைவு விழா 03.11.207 அன்று காலை 9.30 மணியளவில் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் கலாச்சார மண்டபத்தில் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் மங்கல விளக்கேற்றல் ஆரம்பமானது.

நிகழ்வில் முக்கிய நிகழ்வுகளாக மாருதம் சஞ்சிகை இதழ் 17 வெளியீடு, சான்றோர்களை கௌரவித்தல், மாணவச் சாதனையாளர்களுக்கான விருது வழங்கல் போன்ற நிகழ்வுகளுடன் கலைநிகழ்ச்சிகளும் பட்டிமன்றமும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்ப்பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி க.மங்கலேஸ்வரன், பிரதேச செயலாளர் கா.உதயராசா, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் சைவப்புலவர் இ. நித்தியானந்தன், வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.முத்து இராதாகிருஸ்ணன், சிவநெறி புரவலர் சி.ஏ இராமசாமி, டாக்டர் ஓ.கே குணநாதன், நயினை கிருபானந்தன் மற்றும் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத் தலைவர் நா.சேனாதிராசா,            க. ஐயம்பிள்ளை, ஆசிரியர் மணி வையாப்புரிநாதன் இன்னும் பெரியோர்கள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் மாணவர்களும், கலை ஆர்வம் கொண்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here