வவுனியா கிறீஸ்தவ திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் முதியோர் விழிப்புணர்வு செயல்திட்டம்

0
338

இன்று 20.09.2017 புதன்கிழமை வவுனியா கிறிஸ்தவ திரச்சபை தமிழ்க்கலவன் பாடசாலையின் (சி.சி.ரி.எம.எஸ) பாடசாலையில் கல்லூரி அதிபர்  திரு. பஸ்தியாம்பிள்ளை தலைமையில் வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தின் முதியோர் விழிப்புணர்வு செயல்திட்டம் சிறப்பாக இடம்பெற்றது.

இதில் பிரதி அதிபர் பிரதாபன் பூந்தோட்டம் முதியோர் சங்க உறுப்பினர்கள் தலைவர்திரு.வி.மாசிலாமணி,செயலாளர்எஸ்.ஞானாம்பிகை,திருஎஸ்.வேலாயுதபிள்ளை, என்.சின்னப்பா, எஸ்.செல்லத்துரை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன், மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகமூடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சங்கத்தலைவர் திரு வி.மாசிலாமணி பாடல்பாடி மாணவர்களை மகிழ்வித்தார் .

பாடசாலை ஆசிரியர் இலக்கியரத்னா ஜ. கதிர்காமசேகரம் அவர்கள் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடாத்தினார் .

பிரதான உரையை மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் நிகழ்த்தினார் .  பெரியாரைப்பேணித்தமராகக்கொளல்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . ‘மாணவர்கள் இன்றைய காலகட்டத்தில் தொடர்பு சாதனங்களால் சிந்தனைக் கலைப்புகளுக்கு உட்பட்டுள்ளதால் பெரியோரின் வழிநடத்தல் மிகவும் அவசியமாகிறது.

உற்றுக்கேட்டல் என்பது காலாவாதியாகிவருகிறது. கவனக்கலைப்புகளுக்கு மருந்தாக பெரியோரை செவிமடுத்தல் அவசியம் . ‘கூரை இல்லாத வீடு, கீரை இல்லாத சோறு , கிழவி இல்லாத வீடு அர்த்தமற்றவை’ . மூத்தோர் வாயும் முதுநெல்லிக்காயும் முன்னர் கசக்கும் பின்னர் இனிக்கும்  என்ற முதுமொழிகளை நினைவில் வைப்பதுடன் தாய் தந்தையரை மதித்து அவர்களின் அன்பைப்போற்றி வாழக்கற்றுக்கொள்ளவேண்டும் ‘ என்றார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here