அவர்களால் நமது நதியை விற்றார்கள், நமது கிணறுகளையும் ஏரிகளையும், ஏன் நம் தலைக்கு மேல் விழும் மழையைக் கூட விற்று விட்டார்கள். லண்டனிலும், கலிபோனியாவிலும் வசிப்பவர்களிடமிருந்து நாம் தண்ணீரை வாங்குகிறோம். இனிமேல் எதைத் திருடப்போறிhர்கள்? நம் மூச்சுக்காற்றில் இருக்கும் நீர்த்துளிகளையா? எமது நெற்றியில் வழியும் வியர்வை துளிகளையா அல்லது சிறுநீரையா?

இந்த வசனத்துடன் மழைகூட (Evan the Rein) என்கிற ஸ்பானி மொழிப் படத்தில் தண்ணீர் தனியார்மயமாக்களை எதிர்க்கும் டானியல் நடிகர் மக்கள் போராட்டம் ஒன்றில் கூறுகிறார்.

பொலிவியாவில் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் அந்த நாட்டு மக்களுக்கும் பல்தேசிய கம்பனிகளுக்கும் இடையில் நடந்த தண்ணீருக்கான போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் அது. இந்த திரைப்படம் உண்மைகளை பொலிவியாவுக்கு வெளியில் கொண்டு வந்தது என்பது தான் நிதர்சனம்.

பொலிவியாவில் தண்ணீரை அரசு போட்டா என்னும் தனியார் நிறுவனத்திற்கு தாரைவர்த்ததன் மூலம் அங்குள்ள மக்கள் தண்ணீருக்காக பட்ட கஷ;டம் கொஞ்ச நஞ்சம் அல்ல. கொடுமையின் உச்சக்கட்டமாக பெய்கின்ற மழைக்கு கூட மக்களிடம் வரி செலுத்தாமல் சேமிக்க முடியாதென்று ஆராயகம் செய்தது அந்த கம்பனி இந்த கொடுமைகளை எதிர்த்து வெகுண்டெழுந்த மக்களை பொலிவியா தரகு முதலாளித்துவ அரசு இராணுவத்தைக் கொண்டு அடக்க முற்றப்பட்டது. துப்பாக்கி சூட்டில் பல மக்கள் மடிந்தும் மக்கள் அடிபணியாது தொடர்ந்து போராடி அந்த நிறுவனத்தை நாட்டை விட்டு துரத்தியது மட்டுமல்ல இல்லாமல் மக்கள் விரோதமான கொடுங்கோல் அரசையும் துரத்தி அடித்து மக்கள் அரசு ஒன்றை நிறுவினர். இந்த நிகழ்வு வரலாற்றில் எமக்கு பெரும் பாடத்தை புகட்டுகின்றது.

இம்முறை வடக்கில் பருவ மழைபொய்த்துவிட்டது. விவசாய நிலங்கள் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்குவதுடன் எதிர்காலத்தில் குடிநீர் பிரச்சினை புதாகரமாகலாம். இப்படியான சூழலில் தான் நாம் தண்ணீரின் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்கின்றோம். எப்போதும் பிரச்சினைகள் வரும் போது அதைப் பற்றிப் பேசுவதும் அப் பிரச்சினை முடிவுற்ற பின் அதைப் பற்றி மறந்து போவதும் எமது வழக்கமே ஏன் என்றால் நாம் சூகர்வு கலாச்சாரத்தில் மூழ்கி எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கே எமக்கு நேரம் இருப்பதில்லை.

அண்மையில் மாலைதீவில் நடந்த சம்பவத்தை நாம் உற்று நோக்க வேண்டும். மாலைதீவில் குடிநீர் பிரச்சினை என்பது பெரும் பிரச்சினையாக மாறியிருக்கிறது. நிலத்தடி நிரை தனியார் கம்பனிகளுக்கு தாரைவார்த்த பின்பு தண்Pர் பிரச்சினையை தீர்ப்பதற்கு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை மாலைதீவு அரசு மேற்கொண்டிருந்தது. ஆனால் அண்மையில் அந்த கடல் நீரை குடிநீராக்கும் இயந்திரம் வெடித்து சிதறியதால் மாலைதீவின் தலைநகரமான மலாயில் வசிக்கும் ஒரு லட்சம் மக்களுக்கு மேல் தண்ணீர் இல்லாமல் தவித்துப் போனார்கள். ஒரு லீற்றர் தண்ணீர் வாங்குவதற்கே பெரும் நேரத்தை வரிசையில் நின்றே செலவளிக்க வேண்டி ஏற்பட்டது. மாலைதீவு தண்ணீர் தட்டுப்பாட்டை ஈடுசெய்ய சீனா மற்றும் இந்தியாவிடம் கையேந்த வேண்டி ஏற்பட்டது. அபிவிருத்தி, வளர்ச்சி என்ற பெயரில் வளங்களை தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுப்பதன் மூலம் நீர் தட்டுப்பாடு, நீர் குடிப்பதற்கு உகந்ததற்ற நிலை உருவாகியுள்ளது. இந்த இலச்சனத்தில் அரச நீரை தனியார் மயப்படுத்தும் செயலில் ஈடுபடுவது காசில்லாவிட்டால் தண்ணீர் இல்லாமல் மக்களை விக்கசி சாக சொல்கின்றதா?

இன்று பெற்றோலிய வியாபாரத்தில் கிடைக்கும் நிகர லாபம் 30மூ என்றால் தண்ணீர் வியாபாரத்தில் 40மூ மேல் கிடைக்கின்றது. எதிர்காலத்தில் இது பலமடங்கு அதிகமாகும். இதனால் தண்ணீருக்கான வியாபாரத்தை பெருமளவு பல்தேசியக் கம்பனிகள் போட்டி போட்டுக் கொண்டு நடாத்துகின்றன. இந்த வியாபாரம் நடத்துவதற்காக வளர்ந்து வரும் நாடுகளின் வறுமை நிலையை பயன்படுத்தி கடன் கொடுத்து கடன் சுமையை அதிகரித்து அந் நாடுகளில் வளங்களை தனியார் மயமாக்குதவற்கு அழுத்தம் கொடுகின்றனர். மறுக்கும் நாடுகளின் இன, மத, சாதி பிரச்சினைகளை தூபமிட்டு வளர்த்து குழப்பங்களை ஏற்படுத்தி தமது பிடிக்குள் கொண்டு வருகின்றனர். இந்த கைங்காரியத்தை திட்டமிட்டு சிறப்பாக நிகழ்ச்சி நிரல் மூலம் சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பனவற்றின் தலைமையில் கட்சிதமாக நாடுகளுக்குள் நடாத்துகின்றன. உலக வங்கியினுடைய இலக்கே தண்ணீரை தனியார் மயமாக்குவதே.

எமது நாட்டில் உள்ள நீர் வளத்தை தனியார் மயமாக்குவதில் கட்சிதமான திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த அரசு இதற்கான ஆரம்ப கட்டவேலைகைளை ஆரம்பித்தது. தற்போதைய அரசு அதை கடும் செயலாக்கத்துடன் நடைமுறைப்படுத்த முனைகின்றது. அதற்கு தடையாய் உள்ள அரசியல் யாப்பை மாற்றி அமைக்கின்ற முழு முயற்சியில் ஈடுபடுகின்றது. ஒரு நாட்டின் வளத்தையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை நிலையும் அந் நாட்டில் பாயும் செழிப்பான ஆற்றுப்படுக்கைகள் அல்லது காய்ந்து உலர்ந்து வரண்ட பூமியும் தான் தீர்மானிக்கின்றது. எமது நாடு நடுத்தர தண்ணீர் வளம் கொண்ட நாடு இந்த வளத்தை தனியார் மயமாக்குவதன் மூலம் உழைப்பில் பெரும் தொகையான பணத்தை செலவழிக்கும் நிலை ஏற்படும். ஆட்சி ஏறியிருக்கும் ஊழல் பெருச்சாலிகளைக் கொண்ட அரசியல் உள்ள அரசியல் வாதிகள் தமக்கு கிடைக்கும் அற்ப தரகுபணத்திற்காக நாட்டையும், மக்களையும் பற்றி யோசிக்காமல் உலக வங்கியினுடைய நிகழ்ச்சி நிரலின் கீழ் தண்ணீரை தனியார் மயமாக்குவதை ஊக்கப்படுத்தி நிற்கின்றார்கள்.

பணம் பணம் என்று நேரமே கிடைக்காமல் ஓடிக் கொண்டிருக்கும் நாம் தண்ணீருக்காக பலகிலோ மீற்றர் ஓடினாலும் கிடைக்காத எதிர்காலத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கினறோம் என்பதை சிந்திக்க தவறி விட்டோம். பில் காட்டாவிட்டால் தண்ணீர் இல்லாமல் விக்கிச் சாக வேண்டிய காலம் வேகு தூரத்தில் இல்லை.

தண்ணீர் அனைத்து உயிரினங்களின் அடிப்படை உரிமை அது ஒரு வியாபார பண்டமல்ல. தண்ணீர் சம்பந்தமான அரசின் கொள்கை வெறும குடிநீர் அளிப்பதோடு மட்டும் தொடர்புடையது அல்ல உணவு பாதுகாப்பு, மக்களின் உடல்நலன், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்பதோடும் தொடர்புடையதாகும். ஆகவே அதை விற்பனைப் பொருளாக எப்பொழுதும் மாற்ற முடியாது. நாம் சிந்திப்போம். தண்ணீரை விற்பனை பண்டமாக்குவதை தடுத்து நிறுத்துவோம் சகலருக்கும் தண்ணீர் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இலவசமாகவும் கிடைப்பதை உறுதி செய்வோம். மக்களைப் பற்றிச் சிந்திக்காத தரகு அரசியல் முதலாளித்துவத்தை முறியடிக்க ஒரணியில் திரள்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here