எம்மை
திறந்த வெளியில் தள்ளி விட்டு
சுற்றிலும் மாய வேலியிட்டு
எச்சங்களிட்டு அடையாளப்படுத்தி
மனித சரணாலயத்தில் வைத்துள்ளனர்.

அனுதாபிகலான பலர்
வந்தனர் பார்த்தனர் கேட்டனர்
ஆகா ஓகோ
என்றனர் சென்றனர் அவர்க்கு
எங்Nகு தெரிந்தது
நமது மாய வேலியும்
கண்ணசைவாலே
தடுக்கப்பட்ட பேச்சுரிமையும்
ஆடையிட்டு மறைக்கப்பட்ட
அடையாளங்களும்.

மீண்டும்
ஓர் அம்மா வந்தார்
வெளிர் வேட்டிகளும்
குங்கும நெற்றிகளும்
என்று பலர் வந்தனர் எமை
அழைத்தனர் பேசினர் ஆதங்கப்பட்டனர்
ஆனால்
அறிக்கை விடும் போது
வழக்கம் போல் எம்மையும் மறந்தனர்.

ஐயோ
ஆதாய அனுதாபிகளே
இன்னும் எமது பிய்ந்த சதை
ஒட்டவும்மில்லை
வடிந்த குருதி
காயவும்மில்லை
இதற்குள்ளே – எம்
இனத்தின்
புதைக்குழி தோண்டி – எம்
ரணங்களை
கிளரி – எம்
வேதனைகளை
அரசியல் வியாபாரமாக்கரீர்கள்.

-திலக்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here