போராடும் தமிழகமே பிரேசில் மக்களைப் பார் ! படக் கட்டுரை

0
38
தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகளை பறிக்கும் சட்ட திருத்தங்களை பிரேசில் அரசு கொண்டு வருவதை எதிர்த்து அங்கே பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவத்தின் நெருக்கடியிலிருந்து முதலாளிகளை  காக்க தொழிலாளிகளின் உரிமைகளில் கை வைப்பது சமீப காலமாக அதிகம் நடக்கிறது. பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளர்கள் போராட்டம், கிரீஸ் மக்கள் போராட்டம் போன்று பிரசேலிலும் தொழிலாளிகள் போர்க்குணமிக்க முறையில் போராடுகிறார்கள். போராடும் தமிழகம் பிரேசிலின் இந்தப் போர்க்குணத்தை கற்க வேண்டும். ஒட்டு மொத்த பிரேசிலையுமே முடக்க வைத்த அந்தப் போராட்டக் காட்சிகள் சில…..

பிரேசிலின் வீடற்ற தொழிலாளர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ரியோ கிராண்ட் டூ சல் –லில் இருக்கும் உள்ளூர் நெடுஞ்சாலையை மறித்து போராடுகிறார்கள்.

“சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் திருத்தங்களை எதிர்க்கிறோம்” – வயதான மக்கள் பிடித்திருக்கும் பேனரின் வாசகம்.

பிரேசிலின் அதிபர் டெமரின் இந்த சீர்திருத்தங்கள் பிரேசில் மக்கள் காலம் காலமாக அனுபவித்து வரும் உரிமைகளை பிடுங்குகிறது.

சா பாவ்லோ விமானநிலையத்திற்கு செல்லும் சாலையை மறித்து போராடும் மக்கள், அதிபர் டெமரே வெளியேறு என்று முழுங்குகிறார்கள்.

சா பாவ்லோ சாலை மறியலில் தடுப்பரணை எரிக்கும் மக்கள்

கலவரத் தடுப்பு பிரிவு போலீசோடு மோதும் இளைஞர்

சா பாவ்லோவில் ஒரு பெண்ணை கைது செய்யும் கலவரத் தடுப்புப் பிரிவு போலீசு

சாலையில் அமர்ந்து போராடும் மக்களை சுற்றி வளைக்கும் போலீசு

பிரேசிலின் தலைநகரான பிரேசிலியாவில் பொதுப் போக்குவரத்து முற்றிலும் மூடப்பட்டுவிட்டது. மற்ற நகரங்களான ரியோடி ஜெனிரா, சா பாவ்லோவில் அன்றாடம் நடக்கும் ஊர்வலகங்கள் சாலை மறியல்களால் போக்குவரத்து தேங்கி நிற்கிறது.

பிரேசில் அரசில் இந்த சட்டத்திருத்தம், முதலாளிகள் தமது தொழிலாளரின் ஊதியத்தை குறைப்பதையும், வேலை நேரத்தை அதிகரிப்பதையும் அனுமதிக்கிறது.

சென்ற வருடத்தில் சோசலிசக் கட்சியின் தில்மா ரவுசெப் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பதவிக்கு வந்த டெமர் மீது பிரேசிலின் அரசு வழக்கறிஞர் ஊழல் குற்றம் சாட்டியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here