உணவுப் பாதுகாப்பு செயற்திட்டத்தில் அன்னையர் கழகத்திற்கு விதை தானியங்கள் வழங்கிவைப்பு

0
41
வவுனியா தம்பனைச்சோலை அன்னையர் கழகத்திற்கு வன்னிமண் நற்பணி மன்றத்தின் நிதி அனுசரணையில் 50 குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பு செயற்திட்டத்தின் முதற்கட்டமாக விதை தானியங்கள் வங்ழங்கும் நிகழ்வு இன்று காலை தம்பனைச்சோலை எல்லாளன் பொது நோக்கு மண்டபத்தில் குடும்பநல உத்தியோகத்தர் திருமதி நந்தகுமார் சுதர்சினி தலைமையில் இடம்பெற்றது .
நஞ்சற்ற உணவு உற்பத்திகளை வீட்டுத்தோட்டங்களில் ஊக்குவிக்கும் நடவடிக்கையாக இச் செயற்திட்டம் கிராமங்கள் தோறும் ஆரம்பிக்கப்படவுள்ளது . இதன் முதற்கட்ட நடவடிக்கையாக தம்பனைச்சோலை அன்னையர் கழகத்திலுள்ள 50 குடும்பங்களுக்கு எல்லாளன் பொதுநோக்கு மண்டபத்தில் வைத்து வன்னிமண் நற்பணி மன்றத்தின் நிதி அனுசரணயிைல் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது . இந்நிகழ்வில் மகளின் கழகங்கள் , மாதர் அமைப்புக்கள் அன்னையர் கழக உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here