சமூகவேலைத்திட்டத்திற்கு கிடைத்த தடை வேட்பாளராக களமிறங்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது

0
123
வன்னி மாவட்டத்தில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வசதியற்ற மக்களுக்கு வன்னி மக்கள் காப்பகத்தினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொகுதி , குளாய்க்கிணறுகள் , கற்றல் உபகரணங்கள் , வாசிப்புக்கண்ணாடிகள் , சுயதொழில் மேற்கொள்ள வழிகாட்டி செயற்பாடுகளை மேற்கொண்டு வரும்போது ஒரு சிலரால் விடுக்கப்பட்ட அழுத்தம் தடைகள் இங்கு சமூகவேலைத்திட்டம் சமூகப்பொதுப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு அரசியல் பலம் தேவைப்படுவதை எமக்கு உணர்த்தியது இதன் காரணமாகவே இன்று வன்னித் தேர்தல் தொகுதியில் வேட்பாளராக களமிறங்க வேண்டிய நிலையையும் எனக்கு ஏற்பட்டது . என்று வன்னி மக்கள் காப்பகத்தின் தலைவர் நீல் சாந்த தெரிவித்துள்ளார் .
வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
 நான் அரசியலுக்கு வரவேண்டும் சொத்துக்கள் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை என்னிடம் இருக்கும் சொத்துக்கள் தொழில்வாய்ப்புக்கள் எனது குடும்பத்திற்குப் போதுமானது எனது சொந்த வருமானத்தில் இருந்து வன்னியில் பல கிராமங்களில் குடிநீர்  இன்றித் தவிக்கும் மக்களுக்குத் தேவையான குளாய்க்கிணறுகள் , சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொகுதிகள் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இலவச கல்வி நடவடிக்கைகள் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவிகள் என்பன கடந்த இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . அத்துடன் பின்தங்கிய கிராமங்களிலுள்ள வாதியற்ற சுயதொழில் மேற்கொண்டுவரும் பெண்களுக்கு சுயதொழில் வழிகாட்டி செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றேன் . இவ்வாறு பல்வேறு தேவைகளுக்காக எனது சொந்த நிதிகளை செலவு செய்துள்ளேன் இங்குள்ள வசதியற்ற மக்களுக்கு செயலாற்றி வரும்போது எனது கடமைகளுக்கு இங்குள்ள சிலரினால் அழுத்தங்கள் தடைகள் ஏற்படுத்தப்பட்டது . இந்நிலையில் எனது அமைப்பின் பிரதிநிதிகள் எமது அமைப்பின் செயற்பாடுகளை தொடர்ந்த வன்னி மக்களுக்கு வழங்குவதற்கு அரசியல் பலத்தின் தேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு உணர்த்தப்பட்டு அரசியலில் களமிறங்குமாறும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது இதனால் ஜக்கிய வன்னி மக்கள் கட்சி என்ற கட்சியை உருவாக்கியதுடன் அதனைப்பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதங்களினால் சுயேட்சைக்குழுவில் இம்முறை இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கவேண்டிய நிலை எனக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது . இதனால் என்னால் மேற்கொண்டு வரும் சமூவேலைத்திட்டங்களுடன் அரசியல் வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ளும் நிலைமைகளையும் ஏற்படுத்தியுள்ளது எமது அமைப்பினால் கிராமங்களில் சமூகப்பாட்சியை ஏற்படுத்தி வருகின்றோம் . இந்நடவடிக்கை தொடர்ந்து இடம் பெறும் , என்று மேலும் தெரிவித்துள்ளார் .
 அத்துடன் தேர்தல் பரப்புரைகள் புதிய கற்பகபுரம் , மெனிக்பாம் போன்ற பகுதிகளிலும் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here